முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை ஆற்றின் கரைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக லாரிகளை நிறுத்த கூடாது ஆணையாளர் அனிஶ்சேகர் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி டி.பி.ரோடு, ரயில்வே காலனி மற்றும் தத்தனேரி இ.எஸ்.ஐ.மருத்துவமனை ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு பணியினை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக டி.பி.ரோடு, ரயில்வே காலனி மற்றும் தத்தனேரி ஆகிய பகுதிகளில் ஆணையாளர் மரு.அனீஷ்சேகர்.    ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி டெங்கு தடுப்பு பணியாக மண்டலம் எண்.1 வார்டு எண்.16 டி.பி.ரோடு ரயில்வே காலனி வளாகம், ரயில்வே மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் தொட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு செய்து தேவையில்லாத தொட்டிகளை மூடுமாறும், மூடாமல் வைக்கப்பட்டுள்ள அனைத்து குடிநீர் தொட்டிகளையும் மூடி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட ரயில்வே அலுவலரிடம் கூறினார். மேலும் ரயில்வே காலனி வளாகத்திலும், மருத்துவமனை வளாகத்திலும் தேங்கியுள்ள குப்பைகளையும், பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கப்புகளையும் அகற்றி சுத்தமாக பராமரிக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.9 தத்தனேரி வைகை வடகரையில் நடைபெற்ற தீவிர துப்புரவு பணியினை பார்வையிட்டு வைகை ஆற்றின் கரைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு வாகனங்களை நிறுத்தக் கூடாது என நோட்டீஸ் வழங்குமாறு உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள நான்கு சக்கர வாகனம் வாட்டர் சர்வீஸ் சென்டரில் ஆய்வு செய்து தேவையில்லாத பொருட்களை அகற்றுமாறு கூறினார். அங்குள்ள ஒர்க்ஷாபில் ஆய்வு செய்த போது ஆங்காங்கே பழைய பொருட்களும், டீ பிளாஸ்டிக் கப்புகளும் என சுகாதாரமற்ற முறையில் இருந்த காரணத்தினால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்து சுத்தம் செய்யும் கட்டணமாக ரூ.10000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள வீடுகளில் பிடித்து வைக்கப்பட்டுள்ள குடிநீரில் ஆய்வு செய்த போது ஒரு வீட்டில் நீல நிற டிரம்மில் பிடித்து வைத் ்து குடிநீரில் டெங்கு கொசு புழு உற்பத்தி இருப்பது கண்டறிப்பட்டு அங்குள்ள பொதுமக்களிடம் காண்பித்து தண்ணீரினை அகற்றப்பட்டது. பொதுமக்கள் தாங்கள் பிடித்து வைக்கும் குடிநீரினை மூடி பாதுகாப்பாக வைக்குமாறு கூறினார்.
மேலும் தத்தனேரி வார்டு எண்.9 இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு செய்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துமாறு கூறினார். அங்கு பயன்பாடு இல்லாத கீழ்நிலை குடிநீர் தொட்டியில் தேங்கியுள்ள தண்ணீரை பார்வையிட்டு தொட்டியை முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்துமாறு கூறினார். அங்குள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனை குடியிருப்பில் ஆய்வு செய்து ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றுமாறும், குடியிருப்பு வளாகத்தை சுத்தமாக பராமரிக்குமாறும் கூறினார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர்  மதுரம், உதவி ஆணையாளர்  அரசு, வருவாய் கோட்டாட்சியர்  கார்த்திக்கேயன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி செயற்பொறியாளர்  முருகேச பாண்டியன், சுகாதார அலுவலர்  விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள்;  சேகர்,  நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து