முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினசரி கழுவி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்: விருதுநகர் கலெக்டர் சிவஞானம் வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.-= விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவித்யா பொறியியல் கல்லூரியில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள்   கல்லூரி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதா, டெங்கு கொசு புழுக்கள் உருவாகிறதா  என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
தமிழக அரசு தமிழகத்தை டெங்கு இல்லா மாநிலமாக மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தொடர்நடவடிக்கையின் மூலம் டெங்கு பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக திகழ்கிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும்; ஏடிஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், வாரந்தோறும், ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் ஏடிஸ்  கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அதனை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் மருத்துவ அலுவலர்  தலைமையிலான  குழுவினர் பள்ளி இறைவணக்கத்தின் போது காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சுகாதார உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவ, மாணவியர்கள் மத்தியில் கல்லூரி நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் வசிக்கும் வீடுகள், ஊர்களில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பரவாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல் மற்றும் கல்வி பயிலும் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
 ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் தங்கள் வீட்டில் உள்ள நீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை தினசரி கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துவுடன் கொசுக்கள் உள்ளே புகா வண்ணம் மூடி வைத்திடுவது, தங்கள் வீட்டின் வெளியிலும், சுற்றுப்புறத்திலும் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்வதோடு தேவையற்ற மண்பாண்டங்கள், உரல்கள், பழைய பாட்டில்கள், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றில் நீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். 
இந்த நிகழ்வுகளின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  .காப்தர்மீர் உட்பட பல்வேறு அரசுத் துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உடன் இருந்தனர்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து