ரோஹிங்கிய மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் மியான்மர் திரும்ப வேண்டும்: அமெரிக்கா வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      உலகம்
Rohinkiya people(N)

ராக்கைன் - மியான்மரின் ராக்கைன் மாவட்டத்திலிருந்து வங்கதேசத்துக்கு அகதியாக வந்த ரோஹிங்கிய மக்கள் அவர்கள் நாட்டுக்குப் பாதுகாப்பாக திரும்ப வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

வங்கதேசத்தில் தங்கியுள்ள ரோஹிங்கிய முஸ்லிம்களின் முகாம்களை நேற்று  அமெரிக்கப் பணியகம், அகதிகள் துறையைச் சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அதனையடுத்து செய்தியாளர்களை சந்திந்த அவர்கள் பேசும்போது, "மியான்மரின் ராக்கைன் மாவட்டத்தில் துன்புறுத்தல் காரணமாக வங்கதேசத்துக்கு அகதிகளாக வந்த ரோஹிங்கியா மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு அளிக்கும்.


ரோஹிங்கிய மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் மியான்மர் திரும்ப வேண்டும். அதற்காக அமெரிக்கா உழைக்கும்" என்றனர்.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பவுத்தர்களுக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். பலர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றனர். இதுவரை மியான்மரிலிருந்து வங்கதேசத்துக்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து