சேலம் மாவட்டத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      சேலம்
1 a

 

சேலம் மாவட்டம், ஏற்காடு ஊராட்சி ஒன்றியம், செம்மநத்தம் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளியில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, ஆய்வு மேற்கொண்டார். ஆய்விற்கு பின் கலெக்டர் தெரிவித்ததாவது.

கலெக்டர் உத்தரவு

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில் 9 உண்டு உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 7 ஆரம்ப பள்ளியும், 1 நடுநிலைப்பள்ளியும், 1 உயர்நிலைப்பள்ளியும் ஆகும். செம்மநத்தம் உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களின் கல்வி தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. இந்த பள்ளி மாணவ, மாணவியர்களிடம் அறிவியல் பாடம் தொடர்பான பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் மாணவ, மாணவியர்கள் சிறப்பாக பதில் அளித்தனர்.

மேலும், இந்த உயர்நிலைப்பள்ளிக்கு தாட்கோ மூலம் ரூ.33 லட்சம் செலவில் புதியதாக கட்டுப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கட்டிட பணியினை தரமாக, குறிப்பிட்ட கால அளவில் முடித்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மழை காலம் என்பதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கட்டிடங்களின் உறுதி தன்மையினை ஆய்வு மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது திட்ட அலுவலர் (ஆதிதிராவிடர் நலன்) பி.டி.சுந்தரம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் எஸ்.சரவணகுமார், உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து