முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்னிலம், குடவாசல் , திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மழை நீலிர் மூழ்கிய பயிர்கள் அமைச்சர் இரா.காமராஜ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      திருவாரூர்
Image Unavailable

 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல் , திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக விளைநிலங்களில் பயிடப்பட்டுள்ள பயிர்கள் மழை நீரால் சூழப்பட்டுள்ளதை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தொடர்ந்து சேங்கனூர் ஊராட்சி மணலாகரம் கிராமத்தில் மின்கசிவு ஏற்பட்டு உயிரிழந்த விவசாயி குடும்பத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்நிகழ்வுகளில் கலெக்டர் இல.நிர்மல் ராஜ் , நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.கே.கோபால் கலந்து கொண்டனர்.

அமைச்சர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் சொரைக்காயூர் கிராமத்தில் சம்பா நடவு செய்துள்ள வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து உக்கடை கிராமத்தில் பொதுமக்களின் கோரி;க்கை மனுக்களை பெற்று சம்மந்தப்பட்ட அலுவர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். பின்னர் திருப்பாம்புரம் வடிவாய்க்காலில் மழைநீர் வடிந்து செல்வதை பார்வையிட்டு. கரைகளின் பலம் குறித்து காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளரிடம் கேட்டறிந்தார்.

அதனைத்தொடர்ந்து செருகுடி, அன்னியூர், திருவீழிமிழலை, வடமட்டம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து பசுமை வீடு, ஒய்வூதியம், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் பரவாக்கரை மொட்டையாற்றை பார்வையிட்டு பொதுப்பணித்துறை (காவேரி வடிநில கோட்டம்) மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் ஆற்றின் ஒரங்களில் உள்ள செடி, கொடிகளை அகற்றி மழைநீர் விரைவாக வடிவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 3.11.2017 அன்று மின்கசிவு ஏற்பட்டு சேங்கனூர் ஊராட்சி மணலாகரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்ற விவசாயி உயிரிழந்தமையால் அவரின் குடும்பத்தினரை உணவுத்துறை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது...

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் அதன் தாக்கம் மக்களை சென்றடையாமல் பாதுகாக்க தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர் மற்றும் அரசு அலுவலர்கள் நிவாரண பணிகள் மற்றும் தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக முடிகொண்டான் கிராமம் மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் 2 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள் தயார் நிலையில் உள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க 22 குழுக்கள் அமைக்கப்பட்டு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியும் , 04366-226080 ,04366-226090 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.

இவ்வாய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்தமணி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குநர் மயில்வாகணன், வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் திருவேட்டை செல்வன்,காவேரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் தெட்சிணாமூர்த்தி,நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அமிர்தலிங்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து