மார்கரெட்டின் சாதனையை செரீனாவால் முறியடிக்க முடியும்: ஸ்டெஃபி கிராஃப்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      விளையாட்டு
Serena-Steffy Graff 2017 11 5

மேட்ரிட் : அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸால் மார்கரெட் கோர்ட்டின் 24 கிராண்ட் ஸ்லாம் சாதனையை முறியடிக்க முடியும் என டென்னிஸ் ஜாம்பவான் ஸ்டெஃபி கிராஃப் கூறியுள்ளார்.

22 கிராண்ட் ஸ்லாம்

டென்னிஸ் உலகில் கொடிகட்ட பறந்தவர் ஜெர்மனியின் ஸ்டெஃபி கிராஃப். பெண்கள் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், 377 வாரங்கள் தொடர்ந்து டென்னிஸ் தர வரிசையில் முதல் இடத்தில் இருந்தார். டென்னிஸ் வரலாற்றில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ஆஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் முதல் இடத்திலும், 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று ஸ்டெஃபி கிராஃப் 2-வது இடத்திலும் இருந்தனர்.


களத்திற்கு திரும்புவேன்

ஸ்டெஃபி கிராஃப் சாதனையை அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இந்த வருடத்தின் தொடங்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாத்தை கைப்பற்றி முறியடித்தார். செரீனா 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். கர்ப்பிணியுடன் ஆஸ்திரேலியா தொடரில் விளையாட செரீனா, அதன்பின் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் விளையாடவில்லை. குழந்தை பெற்ற பின்னர் மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்புவேன் என்று கூறிய செரீனா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் களம் இறங்குவேன் என்ற நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முறியடிக்க முடியும்

இந்நிலையில் செரீனாவால் மார்கரெட் கோர்ட்டின் சாதனையை முறியடிக்க முடியும் என ஸ்டெஃபி கிராஃப் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டெஃபி கிராஃப் கூறுகையில் ‘‘மார்கரெட் கோர்ட் கிராண்ட் ஸ்லாம் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வீராங்கனை. ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 10 முறைக்கு மேல் கைப்பற்றிய ஒரே வீராங்கனை. 1960 முதல் 1973 வரை 11 முறை ஆஸ்திரேலிய ஓபனை கைப்பற்றியுள்ளார். இவரது சாதனையை செரீனா வில்லியம்ஸால் முறியடிக்க முடியும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து