ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி: சீனாவை வீழ்த்திய இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 5 நவம்பர் 2017      விளையாட்டு
hockey india champion 2017 11 5

ககாமிகாஹரா : ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கியில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று, 2018 உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.

பலப்பரீட்சை

9-வது ஆசிய கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி ஜப்பானில் நடந்தது. இதில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய  இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனான (1989, 2009) சீனா, 2004-ம் ஆண்டு சாம்பியனான இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி லீக் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் சீனாவை சாய்த்து இருந்தது.


உலக கோப்பை...

அதே வேகத்தை இறுதி போட்டியிலும் இந்திய அணி காட்டியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்ததால் பெனால்டி சூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. சூட் அவுட் முறையில் 5-4 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2018 உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தன்னுடைய இடத்தை இந்தியா பதிவு செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து