முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தம்பிராமையா இயக்கத்தில் அவரது மகன் உமாபதி நடிக்கும் "உலகம் விலைக்கு வருது"

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் தம்பிராமையா 4 மாதங்கள் தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் "உலகம் விலைக்கு வருது" படத்தை இயக்குகிறார்.

இதில் பகத் பாசிலுடன் கதாநாயகியாக நடித்த மிருதுளா முரளி நடிக்கிறார். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலையக்கோயில் 7ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. தப்பட்டம் மயிலாட்டம் புலியாட்டம் பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்கள் 4 கேமராக்களுடன் தினேஷ் அவர்களின் நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.

புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படுகிறது. தயாரிப்பு - தேன்மொழி சுங்குரா,எழுதி இயக்குபவர் - தம்பிராமையா,ஒளிப்பதிவு - PK வர்மா, இசை- தினேஷ்,படத்தொகுப்பு - கோபிநாத்,கலை - வைரபாலன்,நடனம் - தினேஷ்நிர்வாக தயாரிப்பு - சாகுல் ஹமீத், அய்யாசாமிதயாரிப்பு நிர்வாகம் - சுப்புசண்டைப் பயிற்சி - ஹரி தினேஷ்,மக்கள் தொடர்பு - நிகில்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து