அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு: ஜப்பான் பிரதமர் அபே இரங்கல்

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      உலகம்
japan primeminister 2017 09 26

டோக்கியோ: டெக்சாஸ் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இரங்கல் தெரிவித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள வில்சன் கவுன்டியில் சதர்லேண்ட் ஸ்ப்ரிங்க்ஸ் எனுமிடத்திலுள்ள ஃப்ர்ஸ்ட் பேப்டிஸ்ட் சர்ச்சில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் பலியாகினர். 10 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட ரம்ப் 11 நாட்கள் சுற்றுப்பயணமாக கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.

தற்போது ஜப்பானிலுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து, "டெக்சாஸின் சதர்லாண்ட் ஸ்ப்ரிங்ஸ் மக்களுடன் இறைவன் இருப்பாராக. சம்பவ இடத்தில் சட்ட அமலாக்கப் பிரிவினரும், எஃப்பிஐ அதிகாரிகளும் உள்ளனர். ஜப்பானில் இருந்தபடியே நிலவரத்தை நான் கண்காணித்து வருகிறேன்'' என்று கூறியிருந்தார்.

டெக்சாஸ் துப்பாக்கிச் சூடு குறித்து டோக்கியோவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஷின்சோ அபே கூறியபோது."இந்த கடினமான நேரத்தில் அமெரிக்க மக்களுடன் துணையிருப்போம்" என்று கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் வடகொரியா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை டிரம்பும், அபேவும் ஆலோசித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து