ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      உலகம்
southi death 2017 11 06

ரியாத்: ஏமன் அருகில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று சவுதி உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறியிருப்பதாவது, "சவுதியிலுள்ள அசிர் மாகாணத்தில் ஏமன் எல்லையோரத்துக்கு அருகில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த சவுதி இளவரசர் மன்சூர் பின் முர்கின் உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த அரசு அதிகாரிகளும் உயிரிழந்தனர் " என்று கூறப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காரணம் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. தொடர்ந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தேடுதல் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இளவரசர் மன்சூர் பின் முர்கின், முன்னாள் சவுதி இளவரசர் முர்கின் பின் அப்துலசிஸ்ஸின் மகன் ஆவார்.சவுதி அரசு குடும்பத்தில் இளவரசர்களுக்கிடையே அதிகாரத்துக்கான போட்டி நடந்து கொண்டிருக்கிறது.இந்த நிலையில் மன்சூர் பின் முர்கினின் மரணம் சவுதியில் பல்வேறு தரப்பினர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து