மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பெண்களுக்கு பிரதமர் மோடி துரோகம்: இமாச்சல் முதல்வர் வீரபத்ர சிங் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      உலகம்
imachal cm 2017 11 06

சிம்லா: மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

இமாச்சல பிரதேசத்தில் வரும் 9-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் முதல்வர் வீரபத்ர சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரு கிறது. காங்கிரஸ் தரப்பில் வீரபத்ர சிங் முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தப்பட்டுள்ளார்.

தேர்தலுக்கு ஒருசில தினங்களே உள்ள நிலையில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாஜக தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


மக்களவையில் பாஜகவுக்கு தற்போதுள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி பெண்களுக்கான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த செப்டம்பர் 21-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த மசோதாவை நிறைவேற்றாமல் பிரதமர் பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார்.
வீரபத்ர சிங்

முதல்வர் வீரபத்ர சிங் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவை பெண்கள் கட்டி எழுப்புகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். உண்மையில் அவர், பெண்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா கடந்த 2010 மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் பாஜகவுக்கு தற்போதுள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த செப்டம்பர் 21-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்த மசோதாவை நிறைவேற்றாமல் பிரதமர் பெண்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து