முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு மாற்றம்

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ஜம்மு: காஷ்மீரின் நீண்ட கால நடைமுறையான சட்டப்பேரவை மாற்றத்தின்படி, ஜம்மு காஷ்மீரின் அரசு அலுவலகங்கள் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, தலைமைச் செயலகம், ராஜ்பவன், காவல் தலைமை அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் ஜம்முவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஜம்முவின் தகிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்கவும் ஸ்ரீநகரின் கடும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் 1872-ல் மகாராஜா குலாப் சிங் 'தர்பார் மாற்றம்' என்னும் நடைமுறையை ஆரம்பித்து வைத்தார்.

இதன்படி, அரசு அலுவலகங்கள் 6 மாதங்கள் ஸ்ரீநகரிலும், 6 மாதங்கள் ஜம்முவிலும் இயங்கி வருகின்றன. இதற்காக இரண்டு இடங்களிலும் உள்ள அரசு அலுவலகங்களில் போதிய வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு இரு முறை தலைநகரத்தை மாற்றி, கோப்புகளை இட மாற்றம் செய்வதால் மாநில அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் வீணாவதாகக் குற்றச்சாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஒரே இடத்தில் நிரந்தரமாக அரசு அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதனிடையே தலைநகர மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆளும் கட்சி உரிய வகையில் செயல்படவில்லை என்று கூறியும் காங்கிரஸ் கட்சியும், வர்த்தகர்கள் கூட்டமைப்பும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து