முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. என்பது 'கிரேட் செல்பிஷ் டாக்ஸ்' மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, நரேந்திர மோடியின் ஜி.எஸ்.டி. திட்டத்தை கிரேட் செல்பிஷ் டாக்ஸ் (பெரிய சுயநல வரி) என மேற்கு வங்க மாநிலம் முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கி பேசியுள்ளார்.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு சீர்திருத்த திட்டங்களுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதில் ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தமும் ஒன்று. இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி என்பது கிரேட் செல்பிஷ் டாக்ஸ் (பெரிய சுயநல வரி)என கருத்து தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய தோல்வி

“ஜி.எஸ்.டி. வரி மக்களின் பொருளாதாரத்தை சீர்குலைத்துவிடுகிறது. அவர்களின் தொழில் மற்றும் பணிகளுக்கு தீங்கு விளைவிக்கிறது. இது மிகப்பெரிய தோல்வியாகும்.  பணமதிப்பிழப்பு  மிகப்பெரிய பேரிடராகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்” என மம்தா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் கருப்பு நிற சதுரத்தை புகைப்படமாக பதிவேற்றம் செய்துள்ளார்.

கருப்பு தினமாக ...

திரிமுணால் கட்சியினர்  நவம்பர் 8-ம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒருபகுதி என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து