முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை: யோகி ஆதியநாத் மீது மாயாவதி குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, யோகி ஆதித்யநாத் அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றச்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டு...

உத்தர பிரதேசத்தில் ஆளும்  பாரதீய ஜனதா அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை என்று மாயாவதி குற்றம் சாட்டினார். உத்தர பிரதேசத்தில் கடந்த செப்டம்பர் மாதம் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுள்ளார். யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றதில் இருந்து, அங்குள்ள அரசு கட்டிடங்களுக்க்கு காவி வர்ணம் பூசப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. லக்னோவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பவனில் வெள்ளை மற்றும் நீல நிறம் இருந்ததை மாற்றி காவி வர்ணம் பூசப்பட்டது.

புறக்கணிப்பு ...

இதையடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பகுஜன் சமாஜ்  கட்சி தலைவர் மாயாவதி, பாஜக அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:- “ மாநில அரசு கட்டிடங்கள், மற்றும் பேருந்துகளுக்கு காவி வர்ணம் கொடுப்பதில் அரசு மும்முரமாக உள்ளது. அரசின் நிதியையும் நேரத்தையும் மாநில அரசு வீணடித்து வருகிறது. பொதுநலன்கள் மற்றும் நலப்பணிகளை மாநில அரசு புறக்கணித்துள்ளது. பிரதமர் மோடி, மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தவறான கொள்கைகளால் விலங்குகளைவிட மனிதர்களின் உயிருக்கு மதிப்பு குறைவாக உள்ளது”

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து