முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.20லட்சம் செலவில் அமைக்கப்பட்ட அதிநவீன ஆய்வகம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்:

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- தமிழ்நாட்டிலே முதல் முறையாக அரசின் நிதியுதவியுடன் ரூ.20லட்சம் செலவில் அரசு உதவிபெறும் பள்ளியான திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அடல் டிங்கரிங் அதிநவீன ஆய்வகத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
பள்ளி மாணவ,மாணவியரின் புதுமையான கண்டுபிடிப்பு திறனை மேம்படுத்திடும் வகையில் நிதிஆயோக் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிநவீன அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாட்டிலே முதலாவதாகவும்,மதுரை மாவட்டத்தில் முதன்மையானதாகவும் திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.20லட்சம் செலவில் அடல் டிங்கரிங் ஆய்வகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வகத்தின் திறப்புவிழா நேற்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவிற்கு பள்ளியின் செயலாளர் ஜெ. பார்த்திபன் தலைமை வகித்தார்.தலைவர் ஜெ.மோகன்,பொருளாளர் எஸ்.நவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏராளமான பள்ளி மாணவ,மாணவியர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பி.கே.என் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.20லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அடல் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.பின்னர் ஆய்வகத்தை சுற்றிப்பார்த்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பள்ளிமாணவிகளின் புதிய கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டு அவர்களை பாராட்டினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழ்நாட்டிலே முதல்முறையாக அரசு நிதிஉதவி பெறும் பள்ளியான திருமங்கலம் பி.கே.என் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன அடல் டிங்கரிங் ஆய்வகத்தை திறந்து வைப்பதில் பெருமையடைகிறேன். வடகிழக்கு பருவமழை 10மாவட்டங்களில் அதிகளவு பெய்து வருகிறது.சென்னையில் மட்டும் 85சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. இதனால் ஏற்பட்டு பாதிப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களின் வழிகாட்டுதலின் படி சீரமைத்திடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக சென்னையில் உள்ள 15டிவிசன்களில் 31அமைச்சர்கள் களப்பணியாற்றி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.இதனிடையே சென்னைக்கு வந்திருந்த பிரதமர் மோடி அவர்களும் தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்கள்.இந்தியாவிலே கல்வித்துறைக்கு முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவது அம்மா அரசு மட்டும் தான்.குறிப்பாக இரட்டை கல்வி உதவித்தொகை குறித்து அதிகாரிகள் அம்மாவிடம் தெரிவித்தபோது மாணவ,மாணவியர் கல்வி கற்றிட எத்தனை உதவித்தொகையானாலும் வழங்குங்கள் என்று தாயுள்ளத்தோடு சொன்னவர் தான் நமது அம்மா. அதன்படி அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு கல்வித்துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கல்விப்புரட்சி செய்து வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ்,முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,திருமங்கலம் நகர் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றிய துணை செயலாளர் சுகுமார்,திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம்,உதவி செயற் பொறியாளர் லீலாவதி,பி.கே.என் உறவின்முறை நாட்டாண்மைகள் பூமிநாதன்,திருஞானம்,சுரேஷ்கண்ணா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து