தொடரை வெல்லப்போவது யார்? கடைசி டி-20 போட்டியில் இந்தியா - நியூசி. இன்று மோதல்

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விளையாட்டு
ind-nz final t20 2017 11 6

திருவனந்தபுரம் : இந்தியா - நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 53 ரன் வித்தியாசத்திலும், ராஜ்கோட்டில் நடந்த 2-வது போட்டியில் நியூசிலாந்து அணி 40 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி-20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (7-ந்தேதி) நடக்கிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து டி-20 தொடரை வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது போல டி-20 தொடரையும் வெல்லும் வேட்கையில் உள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பலன் அளிக்கவில்லை. இதனால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக வீரர்கள் ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஷ்ரேயாஸ் அய்யர் இடத்தில் மணீஷ் பாண்டே அல்லது தினேஷ் கார்த்திக் இடம் பெறலாம். கூடுதல் சுழற்பந்து வீரர் தேவைப்பட்டால் சிராஜ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ் இடம் இடம் பெறலாம். ஆஸ்திரேலியா தொடரில் முத்திரை பதித்த ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்டியா நியூசிலாந்து தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. நிலையான பேட்டிங் வரிசையில் ஆடாததது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடியில் உள்ளார். ரோகித் சர்மா, தவானின் அதிரடியான தொடக்கத்தை பொறுத்தே இந்திய அணியின் ரன் குவிப்பு இருக்கும்.

நியூசிலாந்தை பொறுத்த வரை டி-20 போட்டியில் திறமையான அணியாக திகழ்கிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் முன்ரோ, குப்தில், கேப்டன் வில்லியம்சன், டாம் லாதம், புரூஸ் ஆகியோரும் பந்துவீச்சில் போல்ட், மிலின், சோதி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஒருநாள் தொடரை இழந்ததால் டி-20 தொடரை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூசிலாந்து அணி திகழ்கிறது. இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை பயன்படுத்தி வெற்றி பெற கடுமையாக போராடுவார்கள்.

இரு அணிகளும் இன்று மோதுவது 9-வது டி-20 போட்டியாகும். இதுவரை நடந்த 8 ஆட்டத்தில் இந்தியா ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. நியூசிலாந்து 6-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் முடிவு இல்லை. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெல்விசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்த்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, புவனேஷ்வர் குமார், அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா, யசுவேந்திர சஹால், ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் .

நியூசிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), குப்தில், முன்ரோ, டெய்லர், டாம் லாதம், கிராண்ட் ஹோம், நிக்கோலஸ், போல்ட், மிலின், சவுத்தி, சான்ட்னெர், பிலிப்ஸ் மேட் ஹென்றி, சோதி, டாம் புரூஸ்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து