முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்டர்-17 உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு சிறந்த பங்களிப்பு: பிரதமர் மோடிக்கு பிஃபா தலைவர் நன்றி

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஜூரிஜ் : 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக அரசு சிறப்பான பங்களிப்பு அளித்ததற்கு வாழ்த்து தெரிவித்து பிஃபா தலைவர் ஜியனி இன்பண்டினோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச அளவிலான 17 வயதுக்கு உள்பட்டோருக்கான கால்பந்து தொடர் முதன் முறையாக இந்தியாவில் நடைபெற்றது. கடந்த மாதம் 6-ம் தேதி தொடங்கிய இந்த கால்பந்து திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 28-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி முதன் முறையாக இங்கிலாந்து அணி வெற்றிவாகை சூடியது.

அன்டர் - 17 உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக ரசிகர்கள் மைதானத்திற்கு வந்ததும் இதுவே முதன்முறை ஆகும். 52 ஆட்டங்களை சுமார் 13 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்தனர். இந்நிலையில், கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடைபெற்றதற்கு மத்திய அரசு அளித்த சிறப்பான பங்களிப்புக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றி என சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியனி இன்பண்டினோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து