ஆஷஸ் தொடர்: இங்கிலாந்து துணைக் கேப்டனாக ஆண்டர்சன் நியமனம்

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விளையாட்டு
James Anderson 2017 11 6

பிரிஸ்பேன் : ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி துணைக் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியில் துணைக் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது பென் ஸ்டோக்ஸ் நைட் கிளப்பிற்கு வெளியே வைத்து வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவத்தில் போலீசார் கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்றதால் பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இங்கிலாந்து அணிக்கு துணைக் கேப்டன் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து