ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தல்: இங்கிலாந்துக்கு மிட்செல் ஸ்டார்க் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 6 நவம்பர் 2017      விளையாட்டு
Mitchell Starc 2017 11 6

பிரிஸ்பேன் : உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் இங்கிலாந்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையில் நடைபெறும் மிகப்பெரிய சவால் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கான இரு அணி வீரர்களும் தயாராகி வருகிறார்கள். ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை முன்னின்று கொண்டு செல்பவராக மிட்செல் ஸ்டார்க் உள்ளார்.

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறது. மிட்செல் ஸ்டார்க், வார்னர், ஸ்மித் போன்றோர் இடம்பிடித்துள்ள நியூ சவுத் வேல்ஸ் அணி, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியை எதிகொண்டது. முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் 270 ரன்கள் சேர்த்தது. வார்னர் 5 ரன்னகளில் ஏமாற்றம் அளித்தாலும், கேப்டன் ஸ்மித் சிறப்பாக வியைாடினார். அவர் 130 பந்தில் 76 ரன்கள் சேர்த்தார்.

வெஸ்டன் ஆஸ்திரேலியா சார்பில் ரிச்சட்ர்சன் 4 விக்கெட்டும், மற்றொரு வீரர் டேவிட் மூடி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் வெஸ்டன் ஆஸ்திரேலியா போட்டிங் செய்தது. அந்த அணி 166 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. 67-வது ஓவரை மிட்செல் ஸ்டார்க் வீசினார். இதன் 4-வது, 5-வது மற்றும் கடைசி பந்தில் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். நீண்ட நாட்களுக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பி ஸ்டார்க் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஆஷஸ் தொடருக்கு தயாராகி வரும் ஸ்டார்க், இதன் மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து