தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தூத்துக்குடி
nilavembu kasayam

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு  நடைபெற்றது. தூத்துக்குடி மாநகர வடக்கு பகுதி 10வது வட்ட அதிமுக சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி  வட்ட கோவில் அருகே மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் ஏசாதுரை தலைமையில் நடைபெற்றது. மாநகர வடக்கு பகுதி அவைத்தலைவர் அந்தோணி செல்வராஜ் மாவட்ட பிரதிநிதி சாந்தி முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் திருமனி வரவேற்றார்.இந்நிகழ்வில் ஸ்ரீவகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்

நில வேம்பு கசாயம்

நிகழ்வின் போது உடன் கழக அமைப்புசாரா ஓட்டுனரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் முள்ளக்காடு செல்வக்குமார் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன்  கோமதிமணிகண்டன் மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் அருண் ஜெபக்குமார் மாநகர மேற்கு பகுதி துணைச்செயலாளர் கணேசன்  அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் பொண்ணம்பலம் சுப்பிரமணியன் தனசிங் குருசாமி சரவணகுமார்  வட்டசெயலாளர்கள் ரெங்கன் மாரிமுத்து முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி  மற்றும் உலகநாத பெருமாள் புல்டன் ஜெஸின் ரமேஸ் ஜெயபால் விஜய் அருண்சங்கர் சகாயராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து