கடலூர் மாவட்டத்தில் தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா வரும் 10ல் தொடங்குகிறது: திரளாக பங்கேற்க கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      கடலூர்

கடலூர் டவுன்ஹாலில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழா 10.11.2017 முதல் 15.11.2017 வரை நடைபெறவுள்ளது. அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழாவினை இந்திய மருத்துவ கழகம்  மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர். கடலூர் டவுன்ஹாலில் 10.11.2017 காலை 10.00 மணிக்கு தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழாவினை கலெக்டர்  பிரசாந்த் மு.வடநேரே,   தொடங்கி வைக்கின்றார். தேசிய அளவிலான குழந்தைகள் புத்தகதிருவிழா கடலூரில் குழந்தைகள் தினத்தை முன்வைத்து வரும் நவம்பர் 10-ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி 6 நாட்கள் நடக்க இருக்கிறது. இதில் நேஷ்னல் புக் டிரஸ்ட்(புது டில்லி), சாகித்ய அகாடமி (புது டில்லி), புக் பார்சில்ரன் (சென்னை), உட்பட சமார் 40 சிறார் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான புத்தகங்களை விற்பனைக்கு வைக்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.முருகன்  முன்னிலை வகிக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார், இ.கா.ப.,  குழந்தைகள் திரைப்பட விழாவை சனிக்கிழமை (11.11.2017)  அன்று துவக்கி வைக்கின்றார்.

புத்தக திருவிழா

மாநில அறிவியல் தொழில்நுட்ப மைய முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஐயம்பெருமாள் (10.11.2017), விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் (திருவனந்தபுரம்) விஞ்ஞானி டாக்டர் ராஜசேகர் (11.11.2017), சென்னை மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை (ஊளுஐசு) முதன்மை விஞ்ஞானி டாக்டர் அய்யப்பன்(12.11.2017), புதுதில்லி விக்யான் பிரசார் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் த.வி.வெங்கடேஸ்வரன் உட்பட பல விஞ்ஞானிகளை மாணவர்கள் சந்தித்து உரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கான நாடக கலைஞர் வேலு சரவணன், எழுத்தாளர் சா.கந்தசாமி உட்பட பல எழுத்தாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். புத்தக அரங்குகளுடன், குழந்தைகள் மினி திரையரங்கம், வானைபற்றி அறியவைக்கும் மினி கோளரங்கம் மற்றும் நூலக புகைப்பட காட்சி என பல அறிவு செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.     தமிழில் சிறந்த ஐந்து சிறார் இலக்கிய படைப்பாளிகள் கவுரவிக்கப்பட உள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா, யோகா போட்டிகள், ஓவியப்போட்டி, தீயற்ற சமையல், மாறுவேடப் போட்டி, பவர்பாயிண்ட் வழங்கும் போட்டி, பேச்சுப்போட்டி, விவாத அரங்கம் உட்பட பல்வேறு போட்டிகள் நாள்தோறும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஐம்பது குழந்தைகள் பங்குபெறும் புத்தக அறிமுக நிகழ்ச்சி குழந்தைகள் தினமான நவம்பர் 14 அன்று நடக்கவுள்ளது.தினமும் மாலை 5 மணிக்கு சிறப்பு கலைநிகழ்ச்சிகளாக மாவட்ட இசைப்பள்ளி வழங்கும் நாதஸ்வரம், ஆர்.ஜே.மணி (ஹலோ எப்.எம்) காலை மாலை, ராக் அகாடமியின் நவீன நடனம், ஸ்ரீ நடராஜா நாட்டிய கலா கேந்திராவின் பரதம் என மாணவர்களின் திறமைகளை மேடையேற்ற உள்ளனர்.

இந்தி மருத்துவ கழக மாநில தலைவர் டாக்டர் ரவிசங்கர், இந்திய தொலைதொடர்பு துறையின் மாநில தலைமை பொதுமேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ, கடலூர் சார் ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் உட்பட பல அறிஞர்கள், அலுவலர்கள் நிகழ்வில் பங்கேற்க இசைந்துள்ளனர்.குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பாடு அறிவியல் சிந்தனை வளர்ச்சி மற்றும் புத்தக வாசிப்பு பழக்கம் என பல நல்ல நோக்கங்களை முன்வைத்து இந்த நிகழ்வு கடலூரில் நடைபெறுகிறது.இந்த நிகழ்வை இந்திய மருத்துவ கழகம் (ஐஆயு) கடலூர் முன்நின்று ஏற்று நடத்துகிறது. கடலூர் சிறகுகள், நம்ம கடலூர், ரோட்டரி லயன்ஸ் கிளப், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றனர்.

இந்த 6 நாட்கள் நடைபெறும்  தேசிய அளவிலான குழந்தைகள் புத்தக திருவிழாவில்  பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் திரளாக பங்குபெற்று பயன்பெறவேண்டுமென கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே,   கேட்டுக்கொள்கின்றார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து