ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      திருநெல்வேலி
oxford

தென்காசியில் ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி காவல்துறை சார்பில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு மற்றும் போதைபொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி காசிவிசுவநாதர் கோவில் முன்பு பேரணியை டி.எஸ்.பி., மணிகண்டன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை வரவேற்றுப் பேசினார்.

பேரணி

பேரணி கீழ ரதவீதி, தெற்குமாசி வீதி, பழைய பஸ்ஸ்டாண்ட் ரோடு, ரயில்வே ரோடு, மேம்பாலம் வழியாக சென்று எம்.கே.வி.கே.பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாணவர்கள் சாலை விதிகளை மதிப்போம்!, புகை நமக்கு பகை, போதை பொருட்களை தடை செய்வோம், மது இல்லா உலகை படைப்போம், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர்  என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும் சாலை விதிமுறைகள், போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கறை மாணவர்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனர்.பேரணியில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, தென்காசி வீரமாமுனிவர் ஆர்.சி.மேல்நிலைப் பள்ளி, செவன்;த் டே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாக அலுவலர் கணேசன் நன்றி கூறினார்.இதன் பின்னர் எம்.கே.வி.கே.பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. சாலைபாதுகாப்பு, போதைப்பொருள்  தடுப்பு, மது ஒழிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டி.எஸ்.பி., மணிகண்டன் பரிசு வழங்கி பாராட்டி பேசினார். விழாவில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், ஆக்ஸ்போர்டு பள்ளி முதல்வர் திருமலை, நகராட்சி சுகாதார அதிகாரி ஹக்கீம் மற்றும் பலர் பேசினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து