கமல் அரசியல் பிரவேசம், கூட்டணி: விஜயகாந்த் கருத்து

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      சினிமா
vijayakanth(N)

சென்னை, கமல் அரசியல் பிரவேசம், கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட தாம்பரத்தின் சில பகுதிகள் மற்றும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியை தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆய்வு செய்தார். அவருடன் பிரேமலதா, பார்த்தசாரதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சென்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறியதாவது:
கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளாரே?

கமல்ஹாசன் கட்சி தொடங்கினால் வரவேற்பேன். கமல் மட்டுமல்ல அவரைப்போல் 10 பேர் கட்சி தொடங்கினாலும் வரவேற்பேன். யார் அரசியலுக்கு வந்தாலும் அதை வரவேற்கிறேன்.


கமல்ஹாசன் கட்சி துவங்கினால் கூட்டணி வைத்துக்கொள்வீர்களா?

கமல்ஹாசன் முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு அதை வலுவாக்கி வட்டம் மாவட்டம் என்று வளரட்டும், பிறகு கூட்டணி குறித்து யோசிப்போம்.'' இவ்வாறு விஜயகாந்த் பேட்டியளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து