தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தமிழகம்
Rain tamilnadu 2017 9 9

சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், ஒரிரு இடங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக, வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

நேற்று இலங்கை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலு குறைந்து காணப்படுகிறது. தற்போது தென் கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள தெற்கு கேரள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. அதனை நோக்கி ஈரப்பதம் மிக்க காற்று கிழக்கு திசையிலிருந்து தமிழகம் வழியாக வீசுகிறது.அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மலேசிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் லைஞாயிறில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்துள்ளது.

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும்.


இவ்வாறு அவர் கூறினார். நாகை மாவட்டம் தலைஞாயிறில் 8 செ.மீ., திருத்துறைப்பூண்டி-7 செ.மீ.,கோத்தகிரி, நீடாமங்கலம் -5 செ.மீ., பாபநாசம், நாகப்பட்டினம், குன்னூர் -4 செ.மீ.,பரங்கிப்பேட்டை, தரமணி, பெரியார், திருவாரூர், குடவாசல், அம்பாசமுத்திரம், பென்னேரி, சத்தியமங்கலம் – 3 செ.மீ., தாம்பரம் – 2 செ.மீ., நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் -1 செ.மீ.,மழை பதிவாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து