முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் அமெரிக்க படை தளத்தினை பார்வையிட்டார் டிரம்ப்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

ஓசான், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் நிலையில் நேற்று தென்கொரியா சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அங்கு  படை தளத்தினை பார்வையிட்டார்.

பொருளாதார தடை

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுதங்களை தொடர்ந்து பரிசோதனை செய்து வருகிறார். இதற்கு அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

ஆசிய பயணம்

வடகொரியாவிடம் உள்ள அணு ஆயுதங்கள் அமெரிக்காவை தாக்க கூடிய வலிமை கொண்டவை என கிம் ஜாங் உன் கூறினார். இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 12 நாள் ஆசிய பயணத்தின் ஒரு பகுதியாக தென்கொரியாவிற்கு நேற்று சென்றார். இதனால் வடகொரியாவுடனான பதற்ற நிலை அதிகரிக்கும் சாத்தியமுள்ளது.

பார்வையிட்டார்

டிரம்ப் சியோல் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே-இன் உடன் சந்தித்து பேச்சு நடத்த உள்ளார். இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசப்படும். இதற்கிடையே, அவர் தென்கொரியாவிலுள்ள அமெரிக்க படை தளங்களை பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து