முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளிகள் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா:கலெக்டர்.வே.சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      பெரம்பலூர்

 

பெரம்பலூர் நகராட்சியில் டெங்கு கொசுப்புழுக்களை உருவாகாமல் கட்டுப்படுத்த நகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டெங்கு கொசுப்புழுக்கள் ஒழிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர்.வே.சாந்தா,அவ்வப்போது மேற்கொண்டு, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுப்பதற்குத்தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது

நடவடிக்கை

அதன்படி, நேற்று (07.11.2017) பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட ஆருத்ரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்;கு நேரில் சென்று, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதா என்று கலெக்டர் மேற்கொண்டார்.

மாணவர்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள் மற்றும் வகுப்பறைகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு ஏதேனும் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதா என்று கலெக்டர் செய்து, கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு அளிக்காமல் பள்ளியின் அனைத்துப்பகுதிகளையும் சுத்தம் செய்து கொசு உற்பத்தியாகாத வகையில் பள்ளி வளாகங்களை பராமரிக்க வேண்டும் என்றும், மாணவ-மாணவிகளுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவர்களிடம் அழைத்துச்சென்று உரிய சிகிச்சை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் பள்ளியின் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

 

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து