முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது: அமைச்சர் பி.தங்கமணி தகவல்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, மழை வெள்ளத்தை சமாளிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளோம் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

அதிகாரிகளின் வேகமான பணியை பல்வேறு நலச் சங்கங்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள் என்று அமைச்சர் கூறினார்.

முதலமைச்சரின் உத்தரவுப்படி மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி, வணிக வரித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, சமூக நலத்துறை அமைச்சர் வி. சரோஜா ஆகியோர் தொடர்ந்து 4–வது நாளாக மண்டலம் 9 மற்றும் 10–ல் மழை பாதிக்கபட்ட இடங்களை ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தினர். நேற்று மாலை கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் இரு மண்டல அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தனர்.

நலச்சங்கங்கள் பாராட்டு

மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் பி.தங்கமணி பேசினார். மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள். மேலும் பலத்த மழை காரணமாக சில இடங்களில் தேங்கிய தண்ணீரும் மக்களுக்கு இடையூறு ஏதும் இல்லாமல் உடனடியாக அகற்றியுள்ளீர்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வந்ததும், பல்வேறு பகுதிகளில் இருந்து நலச்சங்க நிர்வாகிகள் வந்து என்னை சந்தித்தனர்.அப்போது அதிகாரிகளும், சட்டமன்ற உறுப்பினரும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். இரவு பகல் பாராது பணிகளை செய்தனர்.இவ்வளவு வேகமாக பணிகள் நடைபெறும் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த அளவுக்கு பணியாற்றினீர்கள்.எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது என்று அந்த நலச் சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் வந்து பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்கள்.மக்களுடன் மக்களாக இருந்து அவர்களது கஷ்டங்களை உணர்ந்து செயல்படுங்கள் என்று அம்மா சொல்லி இருக்கிறார். அவர் எங்களுக்கு கற்று தந்த பாடம் இது. அம்மா வழியில் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம்.உங்களுக்கு பணி செய்ய காத்திருக்கிறோம் என்று அந்த நலச் சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தேன்.

உங்களது (அதிகாரிகள்) பணியை மக்கள் பாராட்டுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள். எனவே உங்களது பணி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

முதலமைச்சர் முன் கூட்டியே பலமுறை ஆய்வு கூட்டம் நடத்தினார். வெள்ள நிவாரண பணிகளுக்காக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக ஒவ்வொரு பகுதிக்கும் நியமித்து பணியை முடுக்கிவிட்டார். கடந்த கால அனுபவங்களை எல்லாம் வைத்து பணிகளை செய்தோம். மேலும் மழை வரும் என்று சொல்கிறார்கள். மழையில் ஒரு தெருவில் கூட தண்ணீர் தேங்க கூடாது. அதற்கு இன்னும் வேகமாக செயல்படுங்கள் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார். இந்த மண்டலத்தில் 181 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 சுரங்க பாதைகளிலும் தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. 650 டன் குப்பைகள் தினசரி அள்ளப்படுகிறது. 1500 கிலோ பிளிச்சிங் பவுடர் தௌி்க்கப்பட்டுள்ளது. 10 நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.103 மருத்துவ முகாம்கள் மூலம் 7 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். போதுமான மருந்து இருப்பில் உள்ளது. மின் துறையை பொறுத்தவரை எந்தவித புகாரும் மக்களிடமிருந்து வரவில்லை. அனைத்து இடங்களிலும் மின் வினியோகம் சீராக உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களில் தங்க வைக்க 16 இடங்கள் தயாராக உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்க போதுமான சமையல் பொருட்கள் இருப்பில் உள்ளது என்று இந்த ஆய்வு கூட்டத்தில் அந்தந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி. தங்கமணி பேசினார்.

80 ஆயிரம் மின்சார பில்லர் பாக்ஸ்

சென்னையில் 80 ஆயிரம் மின்சார பில்லர் பாக்ஸ்கள் உள்ளன. இதில் 6700 பில்லர் பாக்ஸ்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வந்தது. உடனடியாக நடவடிக்கை எடுத்து 5900 பில்லர் பாக்ஸ்களை எடுத்து மாற்றி இருக்கிறோம். மீதியுள்ளவைகளும் மாற்றப்பட்டு வருகின்றன. தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது. தண்ணீர் வடிந்து காய்ந்ததும் உடனடியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது.

மின்சாரம் பற்றி ஏதேனும் புகார் செய்ய எனது வீட்டில் தனியாக போன் உள்ளது. அதில் தகவல் சொல்லலாம். என் கைபேசி நம்பருக்கும் போன் செய்யலாம். உடனடியாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தமிழக முதலமைச்சர் சென்னை மாநகர பகுதியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து மழை நிவாரண பணிகளை கண்காணிக்கவும் துரிதபடுத்தவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் 9 மற்றும் 10 மண்டலங்களில் கடந்த நான்கு நாட்களாக மழையால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினோம். மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், மின்துறை, சுகாதாரத் துறை, காவல் துறை போன்ற துறைகளின் அலுவலர்கள் மிக சிறப்பாக நிவாரண பணிகளை மேற்கொண்டனர். இதற்காக எங்களது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறோம்.இந்த வாரம் பெய்த மழையால் மண்டலம் 9 மற்றும் 10–ல் உள்ள பகுதிகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து அடுத்து புயல் மற்றும் கனமழை வந்தால் மேற்கொள்ள வேண்டிய முன் ஏற்பாட்டு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. தேவையான அனைத்து முன் ஏற்பாடுகளும் மேற்கொள்ளபட்டு தயார் நிலையில் உள்ளது.சுரங்கபாதைகளில் நீரை வெளியேற்ற போதுமான மோட்டார் பம்புகள், சரிந்து விழும் மரங்களை வெட்ட மரம் வெட்டும் இயந்திரங்கள், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களை தங்கவைக்க சிறப்பு மையங்கள், உணவு தயாரிக்கும் கூடங்கள், பொக்லைன் மற்றும் சூப்பர் ஸ்ட்ரக்கர் வாகனங்கள், போதுமான மருந்து மாத்திரைகள் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் பி. தங்கமணி தெரிவித்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், தி.நகர் சத்யா, விருகம்பாக்கம் ரவி, மாநகராட்சி உதவி ஆணையாளர்கள், செயற்பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மண்டல நிர்வாக என்ஜினீயர்கள் பெரியசாமி, ஆர். சின்னதுரை, தி.நகர் பகுதி செயலாளர் டி.டி.பால்ராஜ் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து