முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிக்கு ராமநாதபுரம் கலெக்டர் கல்வி உதவிதொகை வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடக்கவிருந்த குழந்தை திருமணம் சமூகநலத்துறை அலுவலர்கள் மூலம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மாணவிக்கு மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து கல்வி கட்டணத்திற்குரிய உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார்.
 தமிழ்நாடு அரசு திருமண வயதாக பெண்களுக்கு 21 ஆகவும், ஆண்களுக்கு 25 ஆகவும் நிர்ணயித்துள்ளது.  அரசு நிர்ணயித்துள்ள வயதிற்கு முன்பாக திருமணம் நடத்துவது குழந்தை திருமணமாக கருதப்படுவதோடு, சட்டப்படி குற்றம் ஆகும்.  இந்நிலையில் 01.05.2017 அன்று ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், எம்.நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், கற்பகம் ஆகியோரது மகள் செ.மங்கையர்க்கரசி (வயது 16) என்ற சிறுமிக்கு திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் வந்ததையடுத்து, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சி.குணசேகரி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு, மேற்குறிப்பிட்டுள்ள திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.  சம்பந்தப்பட்ட சிறுமி செ.மங்கையர்க்கரசி அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதியில் தங்கி, கீழக்கரையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கணினி அறிவியல் பட்டயப்படிப்பு படித்து வருகிறார். 
 இதனையடுத்து திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் குழந்தைக்கு பெற்றோhரால் போதிய கல்வி வழங்க இயலாத சூழ்நிலையினை கண்டறிந்த மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து செல்வி.செ.மங்கையர்க்கரசிக்கு கல்வி கட்டணத்திற்கான உதவித் தொகையாக ரூ.7ஆயிரத்து 125-  காசோலையினை வழங்கினார்.  இந்த நிகழ்வின் போது  மாவட்ட சமூக நல அலுவலர் சி.குணசேகரி உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து