முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் கலெக்டர் சிவஞானம் தலைமையில் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம், வே.வ.வன்னிய பெருமாள் பெண்கள் கல்லூரியில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்   கல்லூரி வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதா, டெங்கு கொசு புழுக்கள் உருவாகிறதா  என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கல்லூரி வளாகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்கமால் டெங்கு கொசுப்பபுழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
 மேலும்   டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரியில்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியல்  மாவட்ட  கலெக்டர்தெரிவித்ததாவது:-
தமிழக அரசு  டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகாத வண்ணம் தடுத்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள் வீடு மற்றும் பிற கட்டடங்கள், பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் உள்ள நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து தீவிர கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு தடுப்புப் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 79 குழுக்களும், ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதலே கண்காணிக்கப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் வீட்டு உரிமையாளர்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும். உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாகும் நபர்கள்,  நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பபட்டு வருகிறது. கல்லூரி மாணவ, மாணவியர்கள் மத்தியில் கல்லூரி நிர்வாகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் வசிக்கும் வீடுகள், ஊர்களில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் பரவாதவாறு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல் மற்றும் கல்வி பயிலும் இடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் ஏடிஎஸ் கொசுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.   என மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்   தெரிவித்துள்ளார்கள். 
 பின்னர் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வுகளின் போது உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  காப்தர்மீர், வட்டார மருத்துவ அலுவலர்  தி.அனிதா, கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து