முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி தொடங்க எந்த கணக்கில் ரூ.30 கோடி கேட்கிறார் கமல் ? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொண்டர்களிடம் யாரும் பணம் கேட்டது இல்லை என்றும் கட்சி தொடங்க எந்த கணக்கில் ரூ.30 கோடி கேட்கிறார் கமல்ஹாசன் என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை மூலக்கொத்தளத்தில் மழை நிவாரணப் பணிகளை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குதிரை வேக அரசு

முதல்வர் தலைமையிலான அரசு, குதிரை பேர அரசு அல்ல, குதிரை வேக அரசு. கமல்ஹாசனுக்கு  பிறந்தநாள் வாழ்த்துக்கள், யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், மக்கள் ஆதரவு யாருக்கு என்பதுதான் முக்கியம். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; ஆனால் இறுதி எஜமானர்கள் மக்கள் தான்.  நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. இமயமலை போல் இருக்கும் அ.தி.மு.க சிறு குன்றுகளைக் கண்டு அஞ்சாது.

என்ன கால்குலேசன்

எம்.ஜி.ஆர் அ.தி.மு.க என்ற இயக்கத்தை பொதுமக்களை, தொண்டர்களை நம்பி ஆரம்பித்தார். ஜெயலலிதா கட்சியை வழி நடத்தினார். ஆனால் எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ தொண்டர்களிடம் கட்சி நடத்த பணம் கேட்கவில்லை. ஆனால் கமல்ஹாசன் கட்சி நடத்த தொண்டர்களிடம் ரூ.30 கோடி நிதி கேட்கிறார். அரசியல் கட்சிகளிடம் ரூ.30 கோடி வசூல் செய்வது என்ன கால்குலேசன். கமல்ஹாசன் என்ன கணக்கில் இருக்கிறார். உலகத்திலேயே கட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடம் ரூ.30 கோடி வசூல் செய்யும் ஒரே தலைவர் கமல்ஹாசனாகத்தான் இருப்பார். என்று அவர் தெரிவித்தார்.

மழை நீர் வடிந்துவிடும்

மேலும் அவர் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மழை பெய்யும்போது மட்டும்தான் நீர் தேங்குகிறது, மழை நின்றால் நீர் வடிந்துவிடும். 2015 ல் ஏற்பட்ட வெள்ளம் தற்போது ஏற்பட்ட பாதிப்பை பாடமாக எடுத்து கொண்டோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து