ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றிற்கு முன்னேறினார் மேரிகோம்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      விளையாட்டு
Mary Kom 2017 11 4

புதுடெல்லி: ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில் ஜப்பானின் டிசுபாசா கோமுராவை வீழ்த்தி இந்தியாவின் மேரிகோம் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

48 கிலோ எடைப்பிரிவு
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வியட்நாமின் ஹோ சீ மின்ஹ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 48 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மேரிகோம், ஜப்பானின் டிசுபாசா கோமுராவை  எதிர்கொண்டார். இப்போட்டியின் தொடக்கத்திலிருந்து இருவரும் நிதானமாக தற்காப்பு ஆட்டத்தையே விளையாடினர்.

5-0 என்ற கணக்கில் ....
இரண்டாவது ரவுண்டில் இருந்து மேரி கோம் அதிரடியாக குத்துக்களை விட்டார். அவரை சமாளிக்க முடியாமல் டிசுபாசா  திணறினார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் மேரிகோம் டிசுபாசாவை துவம்சம் செய்தார். வெற்றி பெற்ற மேரிகோம் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் வெற்றி பெற்றால் ஆசிய போட்டியில் 48 கிலோ பிரிவில் மேரி கோம் முதல் தங்கப்பதக்கத்தைப் பெறுவார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து