டோனி ஒரு ஜாம்பவான், அவர் ஆட்டத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை: புவனேஷ்வர்குமார் பேட்டி

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      விளையாட்டு
Bhuvaneshkumar Comment 2017 10 11

திருவனந்தபுரம், : டோனியின் ஆட்டத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.

நல்ல முன்னேற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில், ‘பும்ரா பந்து வீசும் முறை வித்தியாசமாக இருக்கும். இதனை புரிந்து கொள்வதில் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் ஏற்படும். அவர் தனது பந்து வீச்சில் நிறைய முன்னேற்றம் கண்டுள்ளார். யார்க்கர் மற்றும் சுலோவாக பந்து வீசுவதிலும் நல்ல ஏற்றம் கண்டு இருக்கிறார். பும்ராவுடன் பந்து வீசுவது நம்பிக்கையை அளிக்ககூடியதாகும்.


குற்றம் சாட்டக்கூடாது

போட்டி தொடங்கியதும் நாங்கள் ஆடுகளத்தின் தன்மை குறித்து கருத்து பரிமாறி கொள்வோம். எந்த மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது என்பது குறித்தும் ஆலோசிப்பதால் இருவருக்கும் நல்ல பலன் கிடைக்கிறது. ராஜ்கோட்டில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி கண்ட தோல்விக்கு பந்து வீச்சாளர்களை குற்றம் சாட்டக்கூடாது.

டோனி ஒரு ஜாம்பவான்

நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. காலின் முன்ரோ எங்களுக்கு சிரமம் கொடுத்து வருகிறார். அந்த அணியில் கனே வில்லியம்சன், மார்ட்டின் கப்தில் ஆகிய சிறந்த பேட்ஸ்மேன்களும் உள்ளனர். டோனியின் ஆட்டத்தில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அவர் ஒரு ஜாம்பவான். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியும்’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து