போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்: கேரள முதல்வருடன் கோலி கலந்து கொண்டார்

செவ்வாய்க்கிழமை, 7 நவம்பர் 2017      விளையாட்டு
Virat-Kohl 2017 9 30

திருவனந்தபுரம்: கேரளாவில் நடைபெற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் அம்மாநில முதல்வருடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கலந்து கொண்டார்.

விழிப்புணர்வு பிரசாரம்
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது கேரள போலீஸ் துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதில் அம்மாநில முதல்வர் பிரணாய் விஜயன், மாநில டிஜிபி லோக்நாத் பெஹாரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

உறுதிமொழி ஏற்பு
இவர்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தினேஷ் கார்த்திக் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கேரள போலீஸாரால் போதை மருந்து எதிர்ப்பு பிரச்சாரத்தின் தொடக்க விழாவாக ‘Yes to Cricket and No to Drugs’ ஸ்லோகம் தொடங்கப்பட்டது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து