முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யுங்கள்: வெங்கையா நாயுடுவிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி :   டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.க்களை தகுதிநீக்கம் செய்யுமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவிடம் ஓ.பி.எஸ். அணியினர் மனு அளித்துள்ளனர்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட்ட 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள மூன்று எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஓ.பி.எஸ். அணியினர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம் மனு அளித்துள்ளனர்.

ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பி. மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆகியோர் நேற்று வெங்கையா நாயுடுவை சந்தித்து மனு அளித்தனர்.

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.பி.யான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுலகிருஷ்ணனை தகுதி நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 3 பேரும் அ.தி.மு.க.வில் இருந்து தினகரன் அணிக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து