பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எளிதாகி விட்டது: லல்லு பிரசாத் யாதவ்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
lalu prasad yadav 2017 9 7

பாட்னா, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது எளிதாகியுள்ளது, இதுதான் மத்திய அரசின் சாதனை என பிகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், பழைய 500 - 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. கள்ளப் பணம் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எனவும் மத்திய அரசு வர்ணித்தது.

''பணமதிப்பு நீக்க நடடிக்கையால் கறுப்புப் பணம் முழுவதும் வெள்ளையாகி விட்டது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது தற்போது எளிதாகியுள்ளது. மத்திய அரசின் சாதனை இதுதான். ஏழை மக்களின் நலனுக்காக செய்யப்பட்ட நடவடிக்கை என கூறி அவர்களை முட்டாளாக்கியுள்ளனர்''. -லல்லு பிராச்த் யாதவ்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதியான  நேற்று ஒராண்டு ஆகும் நிலையில், இதை கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் கடை பிடித்து வருகின்றன. அதேசமயம் கறுப்புப் பண ஒழிப்பு தினமாக ஆளும் பா.ஜ.க கடைபிடித்து வருகிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஒராண்டையொட்டி மேற்குவங்க மாநிலத்தின் பல பகுதிகளிலும், ஆளும் திரிணமூல் காங்கிரஸார் கறுப்பு தினம் அனுசரித்தனர். மத்திய அரசை கண்டித்து கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்தன.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பணமதிப்பு நீக்க நடவடிக்கை பேரழிவு நடவடிக்கை  என குறிப்பட்டுள்ளார்.

இதுபோலவே பிகார் மாநிலத்தின் பல பகுதிகளிலும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியினர் கறுப்பு தினம் அனுசரித்து பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து கருத்த தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் கூறுகையில், ''பணமதிப்பு நீக்க நடடிக்கையால் கறுப்புப் பணம் முழுவதும் வெள்ளையாகி விட்டது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவது தற்போது எளிதாகியுள்ளது. மத்திய அரசின் சாதனை இதுதான். ஏழை மக்களின் நலனுக்காக செய்யப்பட்ட நடவடிக்கை என கூறி அவர்களை முட்டாளாக்கியுள்ளனர்'' என லாலு கூறினார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து