முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டு மக்களின் இன்னல்களுக்குக் காரணமான பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா? ப.சிதம்பரம் கேள்வி

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் நேரத்தில், ‘நாட்டுமக்களின் இன்னல்களுக்கு  காரணமான இந்த நடவடிக்கை அறமான செயல்தானா?’ என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்கட்சிகள் ‘பணமதிப்பு நீக்க கறுப்பு தினம்’ அனுசரித்து வருவதையடுத்து, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பலருக்கு வேலை பறிபோனதையும் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ‘அற ரீதியிலான நடவடிக்கை, ஒழுங்குக்கான ஒரு முதல் அடிவைப்பு’ என்று நிதியமைச்சர் அருண் தெட்லி தெரிவித்ததையடுத்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தொடர் ட்வீட்களில் அவரது கூற்றின் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.

“பணமதிப்பிழப்பு அறரீதியான நடவடிக்கை என்கிறார் நிதியமைச்சர், நாட்டு மக்கள் மீது துன்பத்தை ஏற்றுவதுதான் அறச்செயலா? குறிப்பாக 15 கோடி தினக்கூலிகள் பாதிக்கப்பட்டது அறச்செயலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஜனவரி-ஏப்ரல் 2017-ல் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை அழித்ததும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டதும் அறமா? கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற எளிதான வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் அறமா?

சூரத், பிவாண்டி, மொராதாபாத், ஆக்ரா, லூதியானா மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை சேதப்படுத்தியது அறச்செயலா? பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்பு தினமான நேற்று உண்மைச் சம்பவங்களை வாசிக்க வேண்டும், பணசுழற்சியை செயற்கையாக குறைத்தது பொருளாதார வளர்ச்சியின்மைக்கும், தேவை குறைவானதற்கும் ஒரு காரணமாகும்.

மோடியின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை சேதமாக்கியுள்ளது என்று பிபிசி கூறுகிறது, பிபிசி என்ன ஊழல் மற்றும் கருப்புப் பண ஆதரவாளரா?

இவ்வாறு தொடர் ட்வீட்களில் ப.சிதம்பரம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து