யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
modi 2017 10 03

சென்னை, யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளது, இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது என்று  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைத்துறையில் சென்னை சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் நிலையில், அதை பாராட்டி, யுனெஸ்கோ அமைப்பு, சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னையை சேர்த்துள்ளது.

இந்தியாவிலிருந்து ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி (காசி), ஆகிய நகரங்களும் படைப்பாக்க நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து