சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக 307 பேர் கைது: சி.பி.ஐ தகவல்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
cbi court(N)

புதுடெல்லி, சட்டவிரோதமாக ரூபாய் நோட்டுகளை மாற்றியது தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 307 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டோரிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

 கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதியன்று ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து ரூ500, ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. அதே நேரத்தில் கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கியவர்கள் சட்டவிரோதமாகவும் ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர். இது தொடர்பாக சி.பி.ஐ பலரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதுவரை மொத்தம் 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அரசு ஊழியர்கள் 180 பேர் என்கிறது சி.பி.ஐ. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ395.19 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து