முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

35000 செயல்படாத நிறுவனங்களின் வங்கி கணக்கில் ரூ.17000 கோடி டெபாசிட் : மத்திய அரசு தகவல்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகான காலகட்டத்தில் செயல்படாத 35,000 நிறுவனங்களின் வங்கி கணக்கில் ரூ.17,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகை வெளியே எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படாமல் இருந்து கொண்டு நிதி சார்ந்த விவரங்களை அறிவிக்காமல் இருக்கும் 2.24 லட்சம் நிறுவனங்களின் பெயர்களை அரசுப் பதிவேட்டில் இருந்து மத்திய அரசு நீக்கம் செய்துள்ளது. ஷெல் நிறுவனங்கள் அல்லது போலி நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும்.

 இத்தகைய நிறுவனங்களின் வலைப்பின்னலை உடைத்து கறுப்புப் பணம், நிதி முறைகேடு, அன்னியச் செலாவணி மோசடி ஆகியவற்றைத் தடுப்பதுதான் நோக்கம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷெல் நிறுவனங்கள் ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1.06 லட்சம் இயக்குநர்கள் தகுதி நீக்கத்துக்காக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் அடையாளம் கண்டது. இதில் கேரளாவைச் சேர்ந்த பல தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னணி அரசு ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு போலி நிறுவனங்களைத் தொடங்கி அதில் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்கள் பட்டியலில் டெல்லிக்கு முதலிடம், இங்கிருந்து 74,920 இயக்குநர்கள் அடையாளம் காணப்பட்டு செப்டம்பரில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 24,048, மும்பையில் 68,851, ஹைதராபாத்தில் 41,156, எர்ணாக்குளத்தில் 14,000, கட்டாக்கில் 13,383, அகமதாபாத்தில் 12,692 என்று தகுதி நீக்கத்திற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 சசிகலாவுக்கு தொடர்புடைய போலி நிறுவனங்களான பேன்ஸி ஸ்டீல் பிரைவேட் லிமிடெட், ரைன்போ ஏர் பிரைவேட் லிட், சுக்ரா கிளப், இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் அண்ட் பார்மசூட்டிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் கலைக்கப்பட்டன. சசிகலா உறவினர்கள் இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி சசிகலா, இளவரசி, வி.குலோத்துங்கன் ஆகியோர் இந்தோ-தோஹா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்துள்ளனர்.

இதேபோல், 2013-14 முதல் 2015-16 வரையிலான நிதியாண்டுகளில் நிதி சார்ந்த விவரங்களை அளிக்காமலும், வருடாந்தர வரி ரிட்டன்களை தாக்கல் செய்யாமலும் இருந்து வந்த 3.09 லட்சம் இயக்குநர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தத் தகவல்களை கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் நவம்பர் 5ஆம் தேதியன்று வெளியிட்டது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குநர்களில், 3,000 பேர் 20க்கும் அதிகமான நிறுவனங்களில் இயக்குநர்களாகப் பதவி வகித்துள்ளனர். அதிகாரிகள் மீது நடவடிக்கை நிதி சார்ந்த அறிக்கைகளை ஆய்வு செய்யவும், கணக்குகளுக்கான தரநிலைகளை வகுக்கவும், தவறிழைக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் தேசிய நிதி அறிவிப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இரண்டு வருடங்களுக்கும் அதிகமான காலம் வரை செயல்படாமல் இருக்கும் 2.24 லட்சம் நிறுவனங்களின் பெயர்கள் அரசுப் பதிவேட்டில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டது. பெயர் நீக்கம் செய்யப்பட்ட நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களின் அசையும் சொத்துகள், அசையா சொத்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 35 ஆயிரம் நிறுவனங்கள் இந்த நிறுவனங்களில் சுமார் 35,000 நிறுவனங்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு 17,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலுத்தி, திரும்பப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிறுவனங்களில் ஒரு நிறுவனத்திற்கு மட்டும் 2,134 வங்கிக் கணக்குகள் இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2,484 கோடி ரூபாயைச் செலுத்தி, திரும்பப் பெற்றுள்ளது. நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் இச்செய்தி, 58,000 வங்கிக் கணக்குகள் குறித்து 56 வங்கிகள் வழங்கியுள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். மத்திய நேரடி வரிகள் வாரியம், நிதிப் புலனாய்வுப் பிரிவு, ரிசர்வ் வங்கி ஆகிய அமைப்புகளுடனும் இத்தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து