முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதாருடன் இணைக்காவிட்டாலும் போன் இணைப்பு துண்டிப்பு இல்லை - தொலைத்தொடர்பு துறை விளக்கம்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் எந்த காரணத்தை கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது என்று தொலை தொடர்பு துறை விளக்கம் அளித்துள்ளது.

இணைப்பு கட்டாயம்

அனைத்து வகை சேவைகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை வங்கி கணக்குகள், பான் எண், குடும்ப அட்டை, டிரைவிங் லைசென்சு ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகளை பெற ஆதார் எண் இல்லாமல் முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செல்போனுக்கான சிம்கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் ‘‘லோக்நிதி’’ எனும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சிம்கார்டு பெற ஆதார் எண் அவசியம் என்று உத்தரவிட்டது.

துண்டிக்கப்படமாட்டாது

இதையடுத்து ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பால் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால் மக்களுக்கு முடிவு எடுப்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக தொலை தொடர்பு துறை புதிய விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘‘ஆதார் எண் இணைக்கப்படாத செல்போன் இணைப்புகள் எந்த காரணத்தை கொண்டும் துண்டிக்கப்படமாட்டாது’’ என்று கூறியுள்ளது.

நடவடிக்கை தொடரும்

மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் மனோஜ் சின்கா இது பற்றி கூறுகையில், ‘‘மக்களுக்கு புதிய செல்போன் இணைப்புகளை அதிக அளவில் கொடுக்க வேண்டும் என்பதே லட்சியமாகும். இணைப்பை துண்டிக்க வேண்டும் என்பது எங்கள் லட்சியம் அல்ல. என்றாலும் போன் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கைகள் தொடரும்’’ என்றார். செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் இல்லை என்று ஏற்கனவே தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து