ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப்: தங்க பதக்கம் வென்ற மேரி கோமிற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      விளையாட்டு
Narendra-Modi-Mary-Kom 2017 11 8

ஹோ சி மின் : ஆசிய பெண்கள் குத்து சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.

வியட்நாம் நாட்டில் ஆசிய பெண்கள் குத்து சண்டைக்கான சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 48 கிலோ எடை பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் இந்தியாவின் மேரி கோம் மற்றும் வடகொரியாவின் கிம் ஹியாங் மீ ஆகியோர் சந்தித்தனர்.

உலக சாம்பியன்


மேரி கோம் 5 முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற பெருமைக்கு உரியவர். மற்ற போட்டிகளில் முதல் 3 நிமிடங்களில் எதிரியை அளவிடுவது என்ற தனது முந்தைய போட்டியை போல் மேரி கோம் விளையாடாமல், மணி அடித்து போட்டி தொடங்கிய சில நொடிகளில் இரு குத்து சண்டை வீரர்களும் கடுமையாக தாக்குதல் ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

முதல் பதக்கம்

வடகொரிய வீராங்கனையின் தாக்குதலை தொடர விடாமல் பதில் தாக்குதல் தொடுத்து மேரி கோம் பட்டத்தினை தன்வசப்படுத்தி கொண்டார். கடந்த 2014ம் ஆண்டு ஆசிய போட்டிகளுக்கு பின் இவர் வென்றுள்ள முதல் சர்வதேச தங்க பதக்கம் மற்றும் ஒரு வருடத்தில் மேரி கோம் வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும்.

நாடே  பெருமிதம் ...

ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற மேரிகோமிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள மோடி, மேரி கோமின் வெற்றியை கண்டு நாடே  பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஆசிய குத்துச் சண்டைப் போட்டியில் மேரி கோம் பெறும் ஐந்தாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து