தேசிய சீனியர் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் பிரனோய்

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      விளையாட்டு
Prannoy champion 2017 11 8

மும்பை  : மும்பையில் நடைபெற்ற தேசிய சீனியர் பேட்மிண்டன் தொடரின் இறுதி போட்டியில் கிடாம்பி ஸ்ரீகாந்தை வீழ்த்தி பிரனோய் சாம்பியன் பட்டம் வென்றார்.

82-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டிகள் மும்பையில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் 11-ம் நிலை வீரரான எச்.எஸ்.பிரனோய் ஆகியோர் மோதினர்.

முதலில் இருந்தே பிரனோய் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்துடனான முதல் செட்டை 21 -15 என்ற கணக்கில் பிரனோய் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடினார். பிரனோயின் ஆட்டத்துக்கு ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 16-21 என்ற கணக்கில் கிடாம்பி ஸ்ரீகாந்த் கைப்பற்றி அசத்தினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் பிரனோய் மிகவும் அதிரடியாக விளையாடினார். அவரது ஆட்டத்துகு ஈடுகொடுக்க முடியாமல் கிடாம்பி ஸ்ரீகாந்த் சரணடைந்தார். இதையடுத்து, கிடாம்பி ஸ்ரீகாந்தை 21 - 7 என்ற கணக்கில் வென்று பிரனோய் சாம்பியன் பட்டம் வென்றார்.

SANDA KOLI 2 public review opinion | சண்டக்கோழி 2 திரைப்படம் ரசிகர்கள் கருத்து

VadaChennai Review | VadaChennai Movie Review | Dhanush | Vetrimaaran | Santhosh Narayanan

Vada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து

SANKAGIRI KOTTAI | Sankagiri Hill Fort travel | சங்ககிரி மலை கோட்டை பயணம்

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து