முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி டி-20 போட்டி : 6 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

புதன்கிழமை, 8 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

திருவனந்தபுரம் : இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தொடரை வென்றது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்றதும் மைதானத்தை பரிசோதித்த நடுவர்கள் போட்டியை 8 ஓவர்களாக குறைக்க முடிவெடுத்தனர்.

இதனையடுத்து, டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சவுத்தி பந்தில் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து கேப்டன் விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார்.

அதிரடியாக விளையாட முயற்சித்த விராட் கோலி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து இஷ் சோதி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடித்தார். அதைத்தொடர்ந்து மணிஷ் பாண்டே களமிறங்கினார். ஷ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களில் வெளியேறினார். அடுத்து மணிஷ் பாண்டேவுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து விளையாடினர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்தது. பாண்டியா 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து 8 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்திலும், கொலின் முன்ரோவும் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் குப்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் 3-வது பந்தில் முன்ரோ கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 8 ரன்னில் ரன்-அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே மற்றொரு நியூசிலாந்து வீரரான கிலென் பிலிப்ஸ் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அப்போது நியூசிலாந்து அணி 4.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்ததாக கொலின் டி கிராண்ட்ஹோமுடன், ஹென்றி நிக்கொலஸ் ஜோடி சேர்ந்தார். நிக்கொலஸ் 2 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய டாம் புரூசும் 4 ரன்களில் ரன்-அவுட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணி 7 ஓவர்கல் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தனர்.

கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை கொலின் டி கிராண்ட்ஹோம் சிக்ஸராக மாற்றினார். இதையடுத்து ஆட்டத்தில் விறுவிறுப்பு அதிகரித்தது. இருப்பினும் அடுத்த பந்துகளை பாண்டியா நேர்த்தியாக வீசி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். நியூசிலாந்து அணி 8 ஓவர்கள் முடிவில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றியது. இந்திய அணி பந்துவீச்சில் பும்ரா 2 விக்கெட்கள் எடுத்தார்.

இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச்சென்றார். முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் இந்திய அணியே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து