எங்களுக்கு எதிராக ஒன்றும் செய்ய முடியாது சவுதிக்கு ஈரான் அதிபர் ஹசன் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      உலகம்
Hassan Rouhani 2017 5 21

ரியாத்: எங்களுக்கு எதிராக உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி சவுதியை எச்சரித்துள்ளார்.

ஏமனில் உள்நாட்டுப் போர் காரணமாக சவுதிக்கும் ஈரானுக்கும் இடையே வார்த்தை மோதல் வலுத்து வருகிறது. சரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சியில் ஈரான் ராணுவம் பின்னணியில் இருக்கிறது. இதனை எங்கள் மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம். அதன்படி ஈரான் மீது போர் தொடுக்கத் தயங்க மாட்டோம் என்று சவுதி எச்சரித்தது.

இந்த நிலையில் சவுதியின் இந்த மிரட்டலுக்கு ஈரான் அதிபர் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ''இஸ்லாமிய குடியரசு நாடான ஈரானின் வலிமை உங்களுக்கு நன்கு தெரியும். ஈரான் மக்கள் மிக வலிமையானவர்கள். அவர்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எங்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். ஆனால் அவர்களால் எங்களுக்கு எதிராக ஒன்றும் சாதிக்க முடியவில்லை'' என்று எச்சரித்துள்ளார்.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து