முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு சொத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் ஆந்திர முதல்வருக்கு ஜெகன் சவால்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருப்பது போல, வெளிநாடுகளில் எனக்கு சொத்து இருக்கிறது என நிரூபித்தால் அரசியலில் இருந்து விலக தயார் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சவால் விடுத்தார்.

ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 6-ம் தேதி கடப்பா மாவட்டத்தில் பாத யாத்திரையை தொடங்கினார். 3-ம் நாளான நேற்றும் கடப்பா மாவட்டத்திலேயே பாத யாத்திரை தொடர்ந்தது. அப்போது வீர நாயனி பல்லி மண்டலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பேசியபோது, “வெளிநாடுகளில் நான் சொத்து சேர்த்து இருப்பதாகவும், பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருப்பதாகவும், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு உட்பட அமைச்சர்கள் பலர் என் மீது வீண்பழி சுமத்தி வருகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அவர் அரசியலில் இருந்து விலகுவாரா?” என கேள்வி எழுப்பினார்.

இந்த பாத யாத்திரை 3,000 கி.மீ தூரம் வரை தொடர்ந்து 6 மாதங்களுக்கு தொடர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து