கல்யாண கோஷ்டி போல் டாக்சி பிடித்து ரெய்டுக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள்

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
raidu 2017 11 09

சென்னை:  திருமண ஸ்டிக்கருடன் வாடகை காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்தது தெரியவந்துள்ளது. சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுக்காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை என 190 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப்பணம் ஒழிப்புக்காக சோதனை நடத்தப்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் வருமான வரித்துறை சோதனை விஷயம் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வருமான வரித்துறை ரெய்டு விஷயம் முன்கூட்டியே கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அதிகாரிகள் வாடகை காரில் சென்றுள்ளனர். மேலும் திருமணத்திற்கு செல்வது போல் கல்யாண ஸ்டிக்கர்களை காரில் ஒட்டியுள்ளனர்.

ரெய்டு நடக்கும் 190 இடங்களுக்கும் அதிகாரிகள் இதுபோலவே கல்யாணத்திற்கு செல்வது போல் சென்றனர். அதிகாரிகள் செல்வது குறித்து யாருக்கும் தகவல் தெரியக்கூடாது என்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த யுத்தியை கையாண்டுள்ளனர்.


அதிகாலையிலேயே ரெய்டு நடத்த முன்கூட்டியே வாடகை கார்களையும் வருமான வரித்துறையினர் முன்பதிவு செய்துள்ளனர். 190 இடங்களிலும் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவில் உள்ள சசிகலாவின் ஆதரவாளர்கள் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து