ஆந்திரா, டெல்லியிலும் சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான நிறுவனங்களில் சோதனை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
sasikala 2017 5 4

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகாவில் மட்டுமின்றி ஆந்திரா, டெல்லியிலும் சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளேடு, இளவரசி மகன் விவேக்கின் ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் நேற்று காலை வருமான வரித்துறை சோதனை தொடங்கியது. இதையடுத்து தஞ்சாவூர், மன்னார்குடி, கொடநாடு, பெங்களூருவிலும் சோதனைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. 

நாடு முழுவதும் மொத்தம் 190 இடங்களில் சோதனைகள் நடைபெற்றதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா, டெல்லியிலும் ஐடி சோதனைகள் நடைபெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து