அஜீத்தின் விவேகம் பட வினியோகஸ்தர் வீட்டில் வருமானவரி சோதனை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
vivegam 2017 11 09

வேதாரண்யம்:  வேதாரண்யம் அருகே உள்ள விவேகம் பட வினியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

ஜெயா டிவி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம், சசிகலாவின் உறவினரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தம் 187 இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள கருப்பம்புலம் வடகாட்டில் இருக்கும் விவேகம் பட வினியோகஸ்தர் வெங்கடாசலத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் வீட்டில் 4 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ரூ. 6.25 கோடிக்கு விவேகம் படத்தை வாங்கி திருச்சியில் வெளியிட்டது குறித்து சோதனை நடந்தது. வெங்கடாசலம் வீட்டில் சோதனை நடப்பதால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் 200 வாடகை கார்களில் வந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து