அதிரடி பேட்டியாளர் புகழேந்தியின் பெங்களூர் வீட்டிலும் ரெய்டு

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      இந்தியா
pugendhi-raid 2017 11 09

பெங்களூர்:  சசிகலா குடும்பத்தை சேர்ந்த பலரது வீடுகளில் தமிழகத்தில்வருமானவரித்துறையினரின் ரெய்டு நேற்றுக்காலை முதல் நடைபெற்றது. அதேபோல பெங்களூரிலுள்ள அதிமுக கட்சி கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி வீட்டிலும் ஐடி ரெய்டுகள் நடந்தன. கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருப்பவர் புகழேந்தி.

இப்போது தீவிரமான தினகரன் ஆதரவாளராக இருந்து வருகிறார். சிறையில் சசிகலாவுக்கு தேவைப்படும் அவசர உதவிகளுக்கு இவரையே நம்பியுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக கடுமையாக பேட்டிகள் அளிப்பவர். இவரது வீடு பெங்களூர் எச்.ஏ.எல் அருகேயுள்ள, முருகேஷ்பாளையா பகுதியில் உள்ளது. நேற்று காலை முதல் புகழேந்தி வீட்டில் ஐடி அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர்.ஒரு பெண் அதிகாரி உட்பட 11 அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து