புதுப்பாளையம் ஒன்றியத்தில் 1079 மாணவர்களுக்கு மடிக்கணினி:பன்னீர்செல்வம் எம்.எல்.எ வழங்கினார்
செங்கம் தாலுக்கா புதுப்பாளையம் காஞ்சி பனைஓலைப்பாடி இறையூர் அம்மாபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த அரசு மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பு மாணவமாணவிகள் 1079 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டது.
விலையில்லா மடிகணினி
அந்தந்த பள்ளிகளில் தனிதனியாக நடைபெற்ற விழாக்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமைதாங்கினார் முன்னாள் மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் நைணாகண்ணு ஒன்றிய அதிமுக செயலாளரும் மாவட்ட வணிகவரி ஆலோசனைக்குழு உறுப்பினருமான புருஷோத்தமன் முன்னிலை வகித்தனர்.
விழாக்களில் சிறப்பு அழைப்பாளராக கலசபாக்கம் தொகுதி எம்.எல்.எ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு 1079 மாணவமாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிகணினிகளை வழங்கி பேசினார் நிகழ்ச்சிகளில் காந்திமதி மீணாட்சி உள்ளிட்ட தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் அரசு ஒப்பந்ததாரர் பச்சையப்பன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.